நாங்களும் பேசுவோம்ல அந்நி(யா)ய பாஷை

Posted: மே 7, 2011 in குற்றங்கள் மட்டும்

ஓ ரி ப பா பா ம ப ர க ல து ராக்க ரி மா பல சந்த ரி க ல பா ம
பௌதி க ர ம பலா

இப்படி பேசினா தான் நீ கிறிஸ்தவன் இல்லேன்னா கிறிஸ்துவுக்கு நீ எவன் ?

அந்நிய பாஷை என்றால் என்ன‌??

அந்நிய பாஷை என்றால் நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழி அல்லாத வேறு ஒரு மொழி (பாஷை) தான் அந்நிய பாஷை!! நம் மொழிக்கு அர்த்தம் இருக்கிறதா?? இருக்கிறதே!! அப்படி என்றால் அந்நிய பாஷைக்கு அர்த்தம் இருக்கிறதா?? இருக்கிறதே!!

ஆனால் நான் சென்ற சில கூட்டங்களில் அந்நிய பாஷை என்று பேசி அது எனக்கு புரியவேயில்லையே!! அந்த பாஷையை யாரும் மொழிப்பெயர்க்கவும் இல்லையே!! ஆனால் வேதம் சொல்லுகிறதே, உலகத்தில் பேசப்படும் எல்லா மொழிகளுக்கும் அர்த்தம் உண்டென்று,

I கொரிந்தியர் 14:10 உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.

அப்படி என்றால் அந்நிய பாஷை என்கிற பெயரில் சபைகளில் செய்யப்படும் துனிச்சலுக்கு என்ன அர்த்தம்!!

ஏன் அந்நிய பாஷை??

படிக்காத மீனவ கூட்டத்திலிருந்து தன் அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக சுவிசேஷம் உலகெங்கும் சொல்ல வேண்டும் என்று கட்டளை கொடுத்து விட்டு கிறிஸ்து இயேசு பரலோகம் சென்று விட்டார்!! இனி இந்த படிக்காத அல்லது ஒரே பாஷையை தெரிந்தவர்கள் எப்படி தான் உலகெங்கும் சென்று வேற்று மொழி பேசுவோருக்கும் சுவிசேஷம் சொல்லுவார்கள்!! அல்லது வேற்று மொழிக்காரர்கள் இவர்களிடத்தில் வரும் போது அவர்களுக்கு எப்படி சுவிசேஷம் சொல்லுவார்கள்!!

இதற்காகவே தேவன் இந்த எளிய மக்களிடம் வேற்று மொழி (அந்நிய பாஷை) பேசுவது மற்றும் வேற்று மொழியை வியாக்கியானம் (அர்த்தம் சொல்லுவது) செய்யும் வரத்தை தனது வல்லமை ஆவியினால் கொடுத்தார்!!

இந்த வரம் ஏதோ அப்போஸ்தலர்கள் அல்லது அன்றைய சபையார் எல்லாரும் சேர்ந்து சபையில் கூச்சிலட கொடுக்கப்படவில்லை, மாறாக சத்தியத்தை அவர்களுக்கு தெரியாத மொழிகளில் (மனிதர்கள் பேசும் / அர்த்தம் உள்ள வார்த்தைகள் கொண்ட மொழி) சொல்லவும், அல்லது அவர்களுக்கு தெரியாத வேற்று மொழியை புரிந்துகொண்டு அதற்கு பதில் கொடுக்கவே கொடுக்கப்பட்டது!!

எடுத்துக்காட்டாக, தோமா, இந்தியாவில் கேரளாவில் வந்து இறங்கின போது அவர் ஒன்றும் மலையாலத்தை கற்று தேர்ந்து வந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இங்கு வந்து கேரளாவில் பேசுவதற்கு தேவன் தாமே அவருக்கு அந்த பாஷையை பேசவோ புரிந்துக்கொள்ளவோ வரமாக தந்திருப்பார்!!

அந்நிய பாஷையின் முதல் அனுபவம்:

அப்போஸ்தலர் 2:4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். 5. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 6. அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 8. அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், 11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.

இப்படி உலகில் எங்காவது ஒரு இடத்தில் பேசப்படும் அர்த்தமுள்ள பாஷையில், அதை கேட்கும் மக்களுக்கு அது புரிகிற பாஷையாக இருப்பது தான் அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்நியபாஷை பேசும் வரம்!! இந்த வரம் நிச்சயமாக ஒரு காலகட்டத்தில் தேவை பட்டது!!

ஆனால் இன்று சபைகளில் அந்நிய பாஷை என்று சொல்லப்பட்டும், பேசப்பட்டும் வருவது உண்மையிலேயே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி ஆவியின் வரமா? இல்லை என்று வசனங்கள் சொல்லுகிறதே!!

1. 1 கொரிந்தியர் 14:9. அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

தெளிவில்லாத வார்த்தைகளால் போடப்படும் கூச்சல் சத்தத்தை தான் இன்று அந்நிய பாஷை என்று சொல்லி ஒரு மாயையில் இருக்கிறார்கள் சபையார்!! சில இடங்களில் இதை பேச பயிற்சியும் அளிக்கப்படுகிறது (இதற்கு நானே சாட்சி)!! வேதம் சொல்லுகிறதே, யாருக்கும் புரியாதது போல், தெளிவில்லாமல் பேசினார் அது ஆகாயத்தில் பேசுகிறது போல், அதாவது செவியின் வழியாக உள்ளே செல்லாமல், ஒன்றும் புரியாததினால் அது தலைக்கு மேல் செல்லும் வார்த்தைகளாக இருக்கிறதே!!

2. 1 கொரிந்தியர் 14:27. யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.

இதுவும் சபையில் நடக்காத ஒன்று!! போதகர் மேடையிலிருந்தப்படியே கத்துவார், “எல்லாரும், எல்லாரும், இப்போ அந்நிய பாஷையில் தேவனை துதியுங்கள், ஒருவர் விடாமல், எல்லாரும் சேர்ந்து தேவன் தரும் அந்த அந்நிய பாஷையை பயன்ப்படுத்துங்கள்” என்று!! எப்படி வேதத்திற்கு முறனான ஒரு செயல்!! ஒருவர், இரண்டு பேர் அல்லது அதிகப்படியாக மூன்று பேர் மட்டுமே பேசி, அதுவும் அவர்கள் பேசுவதற்கு அர்த்தத்தையும் சொல்ல வேண்டுமாம்!! இது இன்றைய சபைகளில் நடக்கிறதா!! இல்லையே, ஏனென்றால் அந்நிய பாஷை வரம் என்பதை ஏதோ விச்சித்திரமான உச்சரிப்பில் பேசுவது என்று நினைத்திருக்கிறார்கள் இன்றைய போதகர்களும் சரி, சபையாரும் சரி!! இப்படி பேசுகிற முறை சுமார் 200 ஆண்டுகளுக்குள் தான் வந்திருக்கிறது, அதற்கு முன் இருந்த கத்தோலிக்கர்கள் அல்லது ப்ரொடஸ்டண்ட் இப்படி எல்லாம் பேசியதாக இந்த செய்தியும் இல்லையே!!

1 கொரிந்தியர் 14:2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

பெந்தகோஸ்தே சபைகளினால் அந்நிய பாஷை என்கிற மாயையை உற்சாகப்படுத்த இந்த வசனம் தான் பயன்ப்படுகிறது!! அதாவது, அந்நிய பாஷையில் தேவனோடு பேசினால் அது பிசாசுக்கு (சாத்தானுக்கு) புரியாதாம்!! ஆகவே நீங்கள் அந்நிய பாஷையில் பேசுங்கள், பேசுங்கள், பேசிக்கொண்டே இருங்கள் என்றும், ஆவியை பெற்றுக்கொண்டதின் முதல் அடையாளமே அந்நியபாஷை பேசுவதாம்!!

இவர்களின் கூற்றுப்படி பாவம் தேவன், தன் பிள்ளைகளின் ஜெபத்தை சாத்தானிடத்தில் போய் சேராதப்படிக்கு அவருக்கு மாத்திரமே புரிகிற பாஷையை தருகிறாராம்!! அந்த ஒரு குறிப்பிட்ட பாஷையில் பேசினால் தான் அது சாத்தானுக்கு விளங்காதாம்!! அதாவது, இவர்கள் சாத்தானுக்கு அத்துனை முக்கியத்துவம் தருகிறார்கள் என்று தானே அர்த்தம்!! தேவனை இத்துனை கீழாக எடைப்போட்டிருக்கிறார்கள் இந்த கூட்டனியர்!! ஆனால் தேவனோ,

லூக்கா 16:15………….. தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்;……..

அப்போஸ்தலர் 15:8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் ……………………

தேவனிடத்தில் பேச அந்நியபாஷை தேவையில்லை, நம் இருதயத்தில் இருக்கும் ஜெபங்களையே அவர் தெரிந்துக்கொள்கிறார்!! சரி இந்த பெந்தகோஸ்தே சபையினர் வரும் முன் இருந்த எந்த ஒரு சந்தத்தியும் பிசாசுக்கு ஜெபம் கேட்டு விடக்கூடாது என்று இது வரை ஜெபித்ததாக இல்லையே!! யூதர்களானாலும் சரி, கிறிஸ்து இயேசு தன் பிதாவிடத்தில் ஜெபித்த போதும் சரி, அதன் பின் வந்த ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரொடஸ்டண்ட் சபைகளானாலும் சரி, யாரும் இப்படி அந்நிய பாஷை பேசி தேவனிடத்தில் ஜெபித்து கிடையாதே!! இப்போ தான் அவர்களின் சபைகளிருந்து கூட்டங்கள் வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக, அந்நியபாஷை என்கிறா மாயையில் எல்லா சபைகளும் சிக்கி இருக்கிறது!!

மேலும் இந்த வசனம் சாத்தானை குறித்து எதுவும் சொல்லுவதில்லையே, மாறாக அந்நிய பாஷையில் ஜெபிப்பவன் மனுஷனிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறான் என்று தானே இருக்கிறாது, அப்படி என்றால் இதில் சாத்தான் எங்கே வந்து விட்டான்!!

அப்படி என்றால் இந்த வசனம் என்ன தான் சொல்லுகிறது!!

1 கொரிந்தியர் 14:2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.

இதன் விளக்கம் 5ம் வசனத்தில் இருக்கிறது!!

இப்ப தமிழ் மாத்திரமே தெரிந்த ஒரு கூட்டம் கூடி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்!! அங்கே வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்து ஆங்கில‌த்திலேயே பிரசங்கத்தை வைக்கிறார் என்றால், அங்கே கூடியிருக்கும் தமிழ் மக்களுக்கு அவர் பேசுவது தான் அந்நிய பாஷை!! அவர் ஆங்கிலத்தில் பேசுவது, தமிழ் மாத்திரமே புரியும் மக்களுக்கு வியப்பாக இருக்கும், இப்படி இருக்க, அவர்கள் நினைப்பது என்னவென்றால் இவர் எங்களிடத்தில் எதையும் சொல்லாமல், தேவனிடத்தில் தான் பேசுகிறான், ஏனென்றால் தேவனுக்கு மாத்திரமே இப்பொழுது, இந்த கூட்டத்தில் இவன் பேசும் பாஷை புரியும், நமக்கு யாருக்கும் புரியவில்லையே என்று!! அவன் பேசுவது என்னவென்று நாம் யாரும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் (எங்களிடத்தில்) பேசாமல், தேவனிடத்தில் (நமக்கு புரியவில்லை, ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எல்லாம் புரியுமே) பேசுகிறான்!! இதில் சாத்தான் எங்கே இருந்து வந்தான் என்று தான் புரியவில்லை!! மனிதனுக்கு புரியவில்லை ஆனால் தேவனுக்கு புரியுது என்று தான் வசனம் சொல்லுகிறது, இதையே ஜோடிச்சு, தேவனுக்கு மாத்திரமே புரியத்தான் அந்நிய பாஷை என்று சொல்லி அந்நிய பாஷை என்கிற ஒரு பெருத்த மாயையை கொண்டு வந்திருக்கிறார்கள்!!

மன்னிக்கவும் காப்பி அடித்த இடம்
http://kovaibereans.activeboard.com/t42560614/topic-42560614/?r=511398

பின்னூட்டங்கள்
  1. abraham சொல்கிறார்:

    எனக்கு இந்த அந்நியாய பாஷை பேச தெரியாது . சொல்லிகொட்டுதால் பேசுவேன்

  2. kovaibereans சொல்கிறார்:

    கலக்கல்!!
    ஆப் கைசே ஹைன்? க்யா கர்த்தே ஹைன்?

    மெய்யாலுமே இது அந்நிய பாஷை தான்!! தைரியமாக பேசலாம்!! ஹிந்தி நமக்கு அந்நிய பாஷை தானே!!

    சரி அர்த்தமும் சொல்லி விடுகிறேன்!!

    நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?

  3. tiffiny சொல்கிறார்:

    tamil @ english

  4. kovaibereans சொல்கிறார்:

    ஆபிரஹாம் அவர்களே, அநேக வல்லமை ஊழியங்கள் () நடக்கும் இடங்கள் இருக்கிறது!! அங்கே சென்றால் நீங்களும் கற்றுக்கொள்ளலாம்!! அதான் இந்த பதிவின் துவக்கத்தில் ஒரு சில வரிகள் இருக்கிறதே, மனனம் செய்துவிடுங்கள், பிறகு என்ன, அசத்துங்கள்!!

  5. Richard Felson சொல்கிறார்:

    ரீமானா ஷாந்தரூபாலா… ஓஓஓஒ ஷாகரபலா, ஷாமான ருத்ராக்கமாலேனெ ஓஓஒ…பாபாபா…. க்ரீயந்தரமங்கேலமான துருபலாக்குயான பாபாபாபா….

    இதற்கு சேனாபதியிடம் கேட்டால் ஒரு வியாக்கியானம் தருவார்…

எதிரொலி