அறிமுகப்பக்கம் !!

குற்றம் சொல்லுவது ஒரு தொழிலா ! எதற்காக இந்த “குற்றம் நடப்பது என்ன???” என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்ற உங்களின் கேள்வி என் செவிப்பறையை வந்து எட்டுகிறது!!

உங்களுக்காக என் உள்ளக்கதவை தாளிட்டு இருந்த நான் தற்போது பலகணி வழியாக பதில் தருகிறேன். இல்லக்கதவை முடி கொஞ்சம் உங்களின் உள்ளக்கதவை திறந்து கொள்ளுங்கள்!!

பலரின் உள்ளத்தில் யார் இவன் என்ற கேள்வி எழும்பியதால் சொல்கிறேன்
பலியாடு

ஆதியிலும் கிறிஸ்தவனில்லை, ஜாதியிலும் கிறிஸ்தவனில்லை, பாதியில் வந்த கிறிஸ்தவன் ,

நானாக விரும்பி தேவன் யார் என்ற நோக்கத்தோடு தேடினேன், வேதங்களை நாடி ஓடினேன்,
வேதம் கிடைத்தது ஆனால் வெளிச்சம் கிடைக்கவில்லை,
நான்கு வேதங்களும்,
பஞ்ச பூதங்களும்,
ஒருவனையே தேவனாக அறிவித்தது,
யார் அந்த ஒருவன்?,
எங்கிருக்கிறான் அவன்? தேடினேன்,

உலகப்பொதுமறை ஒரு வழி சொன்னது “ஆதி பகவன்” என்று , வேதங்கள் சொன்னது “ஆதி அந்தமில்லாதவன்” என்று ,

என் தேடுதலுக்கும் ஒரு எல்லை கிடைத்தது!!! ஆம் தேவன் என்னை தெரிந்து கொண்டார்! ஒரு சபைக்கு போனேன்,தேவனை கண்டேன், அன்பை ருசி பார்த்தேன், அளவில்லா ஆனந்தம் அடைந்தேன், பெரும் பசியானவன் கண்ட விருந்து போல் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் !!!

ஆனால்!! ஆனால்!! ஆனால் !!

எனக்கு வழி காட்டிய கிறிஸ்தவம் , பிளவு பட்டிருப்பதை கண்டு மனம் நொந்தேன், கல்லெல்லாம் கடவுளல்ல என்ற என் கிறிஸ்தவம், கடவுளுக்காக மட்டும் ஊழியம் செய்த என் சபை போதகர்கள், காசுக்காக கள்ளதீர்க்கதரிசிகலாகிப்போன பரிதாபம் கண்டு மனம் வெந்தேன்!! காசில்லை என்றால் கடவுளில்லை என்பதை கண்டு கொந்தளித்தேன்! நான் என்ன பேதுருவா !! பட்டயத்தால் காதர வெட்டுவதற்கு!
சராசரி மனிதன் தானே

அதனால் தான் நமது சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை மக்கள் முன்னிலையில் அரங்கேற்ற இந்த “குற்றம் நடப்பது என்ன” என்ற தளம்,

குறை இருந்தாலும், நிறை இருந்தாலும், என்னிடம் சொல்லுங்கள்,

உங்களைப்பற்றி சொல்லியிருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்

அன்புடன்
குரு

பின்னூட்டங்கள்
  1. kovaibereans சொல்கிறார்:

    Good one!! God Bless You!!

    சமூகத்தில் நடக்கும் குற்றங்களை வெளிச்சம் போட்டு பலர் இருக்கிறார்கள்!! கிறிஸ்தவத்தில் நடக்கும் குற்றங்களை (கள்ள போதனைகளையும் அதினால் பிழைப்பு நடத்தும் அனைவரையும்) வெளிச்சம் போட்டு காட்ட நமக்கு இன்னும் தளங்கள் தேவைப்படுகிறது!! தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்கிற பழமொழி உண்டு!! அந்தபடியே வேதத்தின் வெளிச்சம் எனக்கு வேண்டாம், என் சபையில் இருக்கும் வெளிச்சமே போதும் என்று ஊழியர்கள் பின்னால் ஓடுக்கொண்டு இருப்போரை கிறிஸ்துவின் வழியை காண்பிக்க ஒன்று படுவோம்!!

    தேவன் யார், கிறிஸ்து யார், பரிசுத்த ஆவி என்றால் என்ன, மரணம், ஆத்துமா, ஆவி, சரீரம், நரகம், பரலோகம், பரதீசு, மூன்றாம் வாணம், தீர்க்கதரிசனம், அற்புதங்கள், அடையாளங்கள், அந்நிய பாஷைகள், போன்ற அனைத்தையும் வேத வெளிச்சத்தில் காண்பிப்போம்!!

    http://kovaibereans.activeboard.com

எதிரொலி