ஊழியகாரர்களின் தகுதிகள்!!

ஊழியகாரர்களின் தகுதிகள்

Mona Lisa”

I தீமோத்தேயு 3:

1. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.

2. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

3. அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,

4. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

5. ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

6. அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.

7. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும். சபை உதவிக்காரர் தகுதிகள்

8. அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,

9. விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.

10. மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்.

11. அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும் எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.

12. மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.

13. இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.

சத்தியமா சொல்றேங்க! இதை நான் சொல்லல இந்த வசனம் நம்ம வேதாகமத்துல தான் இருக்கு ………..

ஆனா நாம தான் இதையெல்லாம் படிக்கறது கிடையாது !!

ஆனா!! இப்படி நடக்கிற ஊழியக்காரார்களை கண்டுபிடித்து ………………………………………….. முதெல்ல கண்டுபிடிப்போம் …!!!!!!

பின்னூட்டங்கள்
  1. kovaibereans சொல்கிறார்:

    ஊழியக்காரன் என்றால் வேலைக்காரன்!! இன்று யாராவது (கண்டிப்பாக தேடிபிடித்தால் எங்காவது இருக்கலாம்) இப்படி இருக்கிறார்களா!!

    தேடுங்கள்!! தேடுங்கள்!!! தேடிக்கொண்டே இருங்கள்!!

  2. Guru சொல்கிறார்:

    நானும் கடந்த பத்து ஆண்டுகளாக தேடி வருகிறேன் நண்பரே ! நீங்கள் பார்த்தால் …………….சொல்லுங்கள்

  3. amos சொல்கிறார்:

    ஊழியகாரர்களின் தகுதிகள்… இது சரிதான். ஆனால் விசுவாசிகளின் தகுதி என்ன? என்பதையும் கூறினால் மிகுந்த பயனுள்ளதாய் இருக்கும் .

  4. thoyavan சொல்கிறார்:

    ஆண்டவன் சந்நிதியில் நின்று உபதேசம் பண்ண தகுதி வேண்டுமே தவிர அவனண்டையில் வருவதற்கே தகுதி வேண்டுமோ , அன்பரே தகுதி பார்த்து சேர்த்துக்கொள்ள அவர் ஆட்சி என்ன _ _ _ __ _ மு .௧ வா ?

எதிரொலி