மோசேயின் பாவம் !!!

மோசேயின் பாவம் தான் என்ன? ஏன் அவன் கானானுக்குள் நுழைய வில்லை?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை ஆனால் ஆண்டவரின் பார்வையில் யார் பார்ப்பது …..??????

முதலாவது அவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன், மேலும் ஒரு ஜனத்தையே வழிநடத்துபவன் , எல்லா கலைகளிலேயும் தேறினவன் . வேதங்களை கற்றவன், வாதங்களை ஏற்ப்பவன்.

அப்படி இருக்க முதலில் மோசேயின் கோணத்தில் பார்க்கலாம்

அவர் சராசரி மனிதன் அவனுக்கும் கோபம், தாகம் எல்லாம் இருக்கும் அல்லவா……. நமக்கு கீழே பணி புரியும் ஒன்று இரண்டு பேர் கொடுக்கும் தொல்லையையே நம்மால் தாங்க முடியாமல் நமது மேலதிகாரி மேல் நாம் அதிருப்தி அடைவோம் கொஞ்சம் முனகிக்கொண்டே அவர் கொடுத்த வேலையை செய்ய முனைவோம் .

பலலட்சம் பேர் கொடுக்கும் நேரடி தொல்லை,,, அவர்களின் முறுமுறுப்பு …. ஒரு சராசரி மனிதனை என்ன பாடு படுத்தி இருக்கும் கொஞ்சம் அவனின் இடத்தில் இருந்து சிந்திப்போம் ……………………………. என்ன தலை சுற்றுகிறதா?????

அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அதனால் தான் பேசு என்ற இடத்தில் அடித்தான் … அவனின் நோக்க்கமேல்லாம் இந்த ஜனத்தின் தொல்லையிலிருந்து எப்படியாவது வெளிவர வேண்டும் என்றே இருந்தது . அதனால் தான் கன்மலை என்று சொன்ன உடன் அதை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது . தேவன் சொன்னது அவனின் சிந்தனையில் உறைக்கவில்லை என்றாலும் இறைவன் தனது ஜனத்தின் மீது கொண்ட பாசத்தால் தண்ணீர் வந்தது . ஜனத்தின் தாகம் தீர்ந்தது

இப்போது ஆண்டவருடைய கோணத்தில் பார்க்கலாமே

மோசே என்பவன் ஒரு தனிப்பிறவி… தேவனாலேயே தெரிந்து கொள்ளப்பட்டவன். மலையில் இருக்கும்போது அல்ல!!!!!! அவன் அன்னையின் மடியில் இருக்கும்போதே !!!!!!
அப்போதிலிருந்தே அவனை வழிநடத்தி விரட்டி பக்குவப்படுத்தி அவனுக்கு ஒரு பெரிய பதவியை கொடுத்தார்

அவன் மூலம் அவர் கற்று கொடுக்கும் நீதி என்னவென்றால்
ஒரு தலைவனானவன் தவறு செய்தால்… அவை பின் இருக்கும்
பெருங்கூட்டமே தவறிப்போகும் அபாயம் ..

ஒரு மேலதிகாரி லஞ்சம் வாங்கினால் அவனின் கடைசி ஊழியனும் தன்னால் முடிந்த அளவுக்கு லஞ்சம் வாங்குவான் . அதனால் ஒரு துறையே பாதிக்கப்படும். இதை மாற்ற வேண்டும் என்றால் மேலதிகாரியை தண்டித்தல் போதுமானது

அதே தான் இறைவனும் செய்தார் . மேலும் இந்த ஜனங்கள் வணங்கா கழுத்துள்ளவர்கள்.. முறுமுறுப்பு செய்கிறவர்கள் . தங்களுக்கு உடனடி தேவனை தேடுபவர்கள் இவர்களிடத்தில் மோசேயின் கல்லறை கிடைத்தால் அங்கே போய் உட்கார்ந்துகொண்டு நீ தான் என்னை கானானுக்கு அழைத்துவந்தாய் நீதான் எங்களுக்காக தேவனிடம் பரிந்து பேசினாய் அதனால் கொஞ்சம் எனக்காக வேண்டுதல் செய் என்று அவனின் கல்லறையை ஒரு தேவாலயமாக மாற்றி இருப்பார்கள் . அப்போது தேவன் பின் தங்கி மோசே முன் வந்து இருப்பான் .

இந்த கூற்றில் கருத்து வேறுபாடு இருந்தால் தயவு செய்து மறுமொழி இடுக ..

பின்னூட்டங்கள்
  1. Richard Felson சொல்கிறார்:

    மிகச்சரியென்றே எண்ணுகிறேன். அதனால்தான் மேலதிகாரியான கிறிஸ்துவை ‘தண்டித்து’ ஜனங்களைக் காப்பாற்றுகிறார் தேவன்!

  2. Ranjini Mark சொல்கிறார்:

    ஒரு தலைவனானவன் தவறு செய்தால்… அவை பின் இருக்கும்
    பெருங்கூட்டமே தவறிப்போகும் அபாயம் ..
    This is absolutely correct

  3. Manoj சொல்கிறார்:

    no doubts .clear

எதிரொலி